தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து வரும் 25 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 25 ம் தேதி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : மே-23

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு, பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் முற்றுகையிட்டனர்.மேலும், மருத்துவமனையில், கலெக்டர் ஆய்வு செய்த போது, அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு சிலநிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை கண்டித்து வரும் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. சென்னையில் வரும் 25-ம் தேதி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் பங்கேற்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயக அடிப்படையில் நடைபெறும் எனவும் திமுக தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னை விமானநிலைய்த்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Related Posts