தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : வெளிமாநில நீதிபதிகள் கொண்டு விசாரிக்க வேண்டும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வெளிமாநில நீதிபதிகள் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை : மே-26

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை லட்சக்கணக்கான பொதுமக்கள் அகற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வெளிமாநில நீதிபதிகளை கொண்டு, விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related Posts