தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 437 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

தூத்துக்குடியில், தூய பனிமய மாதா பேராலயத்தின், 437 வது ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள பனிமயமாதா ஆலயம் 437 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை 8 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது

இதையொட்டி அதிகாலை, கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் அருட்திரு ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

பின்னர் மாதா உருவம் பொறித்த கொடி, ஆலயத்திலிருந்து பேண்டு வாத்தியம் முழுங்க, கொடி மரத்திற்கு கொண்டு வரப்பட்டு ஏற்றப்பட்டது.

அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், கரங்களைத்தட்டி, மகிழ்ச்சி பெருக்கை வெளிப்படுத்தினர். வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி பனிமய மாதா சப்பரபவனி நடைபெறுகிறது.

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், இலங்கை, சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வருடம் நடை பெரும் பனிமய மாதா பேராலய திருவிழா பிளாஸ்டிக் இல்லாத திருவிழாவாக கொண்டாடப்படும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Posts