தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அஞ்சல் வாக்கு பதிவு தொடங்கியது

தமிழகத்தில்  வரும் 18 ம் தேதி மக்களவை தேர்தலையொட்டி மாவட்டங்களில் பணிபுரியும்காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லவிருப்பதால் அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் முன்கூட்டியே வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் இரண்டாயிரத்து 300 காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு செல்லவிருப்பதால் அவர்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 

6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி,  விளாத்திகுளம்,  ஓட்டப்பிடாரம்,திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் வாக்குசாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா,  அஞ்சல் வாக்குப்பதிவு செய்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பிற காவலர்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 5 மணியுடன்வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனையடுத்து சீல் வைக்கப்பட்ட  வாக்குப்பெட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட்து. மே 23 ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது இந்த வாக்குகளும் சேர்த்து எண்ணப்படுகம்.

முன்னதாக நடைபெற்ற வாக்குப்பதிவினை  மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சந்திப்நந்தூரி பார்வையிட்டார்.

Related Posts