தூத்துக்குடி மீனவர்கள் சிறைக்காவல் – புத்தளம் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட  தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் வரும் செப்டம்பர் 3-ந் தேதி வரை சிறைக்காவலில் வைக்க புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்தோணி, ரூபிஸ்டன், வில்பிரட், விஜய்,  ஆரோக்கியம், வினோத்,  ரமேஷ் உள்ளிட்ட 8 பேர் கடந்த 18-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன் பிறகு அவர்கள் திரும்பி வரவில்லை. இது குறித்து விசாரித்த போது எல்லையை தாண்டி மீன் பிடித்தாக கூறி 8 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தது தெரியவந்தது. இலங்கையில் வத்தலக்குண்டு என்ற இடத்தில் வைத்து அவர்களிடம் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து தூத்துக்குடியில் உள்ள அவர்களது உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.  இதனிடைய இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரையும் வரும் செப்டம்பர் 3-ந் தேதி வரை சிறைக்காவலில் வைக்க புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts