தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதல் முறையாக பெரிய சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதல் முறையாக  பெரிய சரக்கு பெட்டக கப்பல் போக்குவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் காணொலி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி செல்லும் சிறிய வகை கப்பல்கள் இலங்கையில் உள்ளகொழும்பு துறைமுகத்திற்கு சென்று அங்கிருந்து  பெரிய கப்பல்கள் மூலம் சரக்கு பெட்டகங்கள் சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்குஅனுப்பி வைக்கப்படும். இதனால் நேரம் விரயமாவதுடன் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதாக சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன. .இந்நிலையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தனியார் சரக்கு பெட்டக தளத்தில் இருந்து முதல் முறையாக சீனா, மலேசிய நாடுகளுக்கு நேரடி பெரிய சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை இன்றுதொடங்கியது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் காணொலி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில்வ.உ.சிதம்பரனார் துறைமுகத் தலைவர் ரிங்கேஷ் ராய் துணைத் தலைவர் வையாபுரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts