தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவு

 

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, அம்மாவட்ட காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக மே 22ஆம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால், ஸ்டெர்லைட் ஆலையின் பாதுகாப்பு கருதி தொழிற்சாலை, குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை சுற்றி 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என ஆலை நிர்வாகத்தின் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்புக்கு கூடுதல் காவல்துறையினரை பணியமர்த்த வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். மேலும் ஆலையை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக வரும் 21ஆம் தேதிக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி ரமேஷ் ஆணையிட்டார்.

 

Related Posts