தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள், மாணவர்கள் தொடர்ந்து 53-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி : ஏப்ரல்-05

தூத்துக்குடியில் மக்களின் உயிருக்கு உலை வைக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலை, தற்போது விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசின் துணையுடன் நடைபெறும் இந்த விரிவாக்கத்துக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.  ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 53-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி நடைபெறும் தன்னெழுச்சி போராட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Related Posts