தூய பனிமயமாத பேராலயத்தில் திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

உலக புகழ் பெற்ற தூய பனிமயமாத பேராலயத்தில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழாவில் கூட்டுத்திருப்பலியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலயத்தின் ஆண்டு  திருவிழா விமர்சையாக நடைபெற்றுவருகிறது. இதில்  முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழாவை ஒட்டி இன்று காலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை  ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதனையடுத்து பகல் 12 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலியும்  மாலை 5.30மணியளவில் ஆடம்பர திருப்பலியும் நடக்கிறது.  பின்னர் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலம், மற்றும்  இலங்கை சிங்கப்பூர், வளைகுடா, என வெளிநாடுகளிலிருந்தும் லட்சகணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்க படுகிறது. இந்த திருவிழாவையொட்டி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts