தெங்கு,கன்னட மக்களுக்கு ‘யுகாதி’ வாழ்த்துக்களை முதலமைச்சர் தெரிவித்தார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பன்மொழி பேசும் மக்களும், பாரினில் ஒற்றுமையாக வாழலாம் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள்,  பாரம்பரியம் மற்றும் பண்பாட்டில் வேறுபட்டு இருந்தாலும், உணர்வால் ஒன்றுபட்டு, காலங்காலமாய் தமிழ்நாட்டு மக்களோடு நல்லுறவைப் பேணி, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக உறுதுணையாக வாழ்ந்து வருவது பெருமைக்குரிய ஒன்று என தெரிவித்துள்ளார். மலரும் இப்புத்தாண்டு, அனைவரது வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை தனது மனமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

Related Posts