தெண்டுல்கர் சாதனையைமுறியடித்தார் விராட் கோலி

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் சதமடித்ததன் மூலம் தெண்டுல்கர் சாதனையை, விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் எடுத்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் என 60-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த இலக்கை எட்ட 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன்மூலம்  குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவுசெய்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். ஏற்கனவே, 426 இன்னிங்சில் 60 சதமடித்து சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts