தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால்களில் நீரின் அளவு படிப்படியாக உயரும்

தென்கரை வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களில் திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என போக்குவரத்துரை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட நீர், மாயனூர் கதவணைக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி வீதம் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதேபோல் தென்கரை வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களில் திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக மாயனூர் கதவணையிலிருந்து பாசனத்திற்காக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தண்ணீரை திறந்து வைத்தார். இந்நிகழ்சியில் அரசு அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Posts