தென்கொரியாவிடம் தோற்றதால் தொடரில் இருந்து வெளியேறியது ஜெர்மனி

உலகக் கோப்பை கால்பந்து லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்ததால், நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி தொடரில் இருந்து வெளியேறியது.

ரஷியா : ஜூன்-28

கசான் நகரில் நடைபெற்ற எஃப் பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனி, தென்கொரியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் மிகத் தீவிரமாக விளையாடினர். 90 நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் ஏதும் போடாததால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது 2வது நிமிடத்தில் தென்கொரியா ஒரு கோல் போட்டு அசத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து ஜெர்மனி மீள்வதற்குள், மேலும் ஒரு கோலை அடித்து தென்கொரிய அணி வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவிடம் ஜெர்மனி தோல்வியைத் தழுவியது. நடப்பு சாம்பியனான ஜெர்மனி, ஏற்கனவே 4 முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நாக்அவுட் சுற்றுக்குக் கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறி உள்ளது.

இதேபோல், இ-பிரிவு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் கோஸ்டாரிக்கா அணிகள் மோதின. இறுதிவரை பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்தபோதும், புள்ளிகள் அடிப்படையில் சுவிட்சர்லாந்து அணி நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இ-பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் அணியும், செர்பியா அணியும் மோதிய கடைசி லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது.

Related Posts