தென்னாப்பிரிக்காவில் தேவாலய சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாசுலு நாட்டால் மாகாணத்தில் உள்ள பழமையான தேவாலயத்தில் புனித வெள்ளியை ஒட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது தேவாலயத்தின் சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேவாலயம் ஏற்கனவே சிதிலமடைந்திருந்த நிலையில், தற்போது அங்கு பெய்து வரும் மழையால் சுவர்கள் பலவீனமடைந்திருந்தாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர் மழையால் சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts