தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : மே-16

வடக்கு உள் கர்நாடகாவில் இருந்து தென் தமிழகம் வரை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், வெப்பச்சலனம் காணப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. அதேநேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், கடந்த 24 மணி நேரத்தில் திருச்செங்கோட்டில் 7 செண்டிமீட்டரும், தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 6 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. தென்மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts