தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

            இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரபிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகம் வழியாக இலங்கை கடற்கரை வரை, வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும்,  இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,. இதேபோல் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 13 சென்டிமீட்டரும்,கரூர் பஞ்சப்பட்டியில் 10 சென்டிமீட்டரும், காரைக்கால் பகுதியில் தலா 8சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts