தென் தமிழகத்தில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தென் தமிழகத்தில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : மே-17

தெற்கு உள் கர்நாடகாவில் இருந்து உள் தமிழகம் வழியாக தென் தமிழகம் வரை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தென் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts