தெலுங்கானா எக்ஸ்பிரஸ் திடீர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

அரியானா மாநிலத்தில் சென்று கொண்டிருந்த தெலுங்கானா எக்ஸ்பிரஸ் ரெயில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

அரியானா மாநிலம் அசோதி பல்லப்கர் பகுதியில் இன்று காலை தெலுங்கானா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அதில் உள்ள இரண்டு பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதனைக் கண்ட ஓட்டுனர் , உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.  பயணிகள் அனைவரும் பதற்றத்துடன் வெளியேறினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பிடித்ததை உரிய நேரத்தில் கண்டறிந்து ஓட்டுநர் ரெயிலை நிறுத்தியதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த விபத்தால் இந்த மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Related Posts