தெலுங்கானா மாநிலத்தின்  இரண்டாவது முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்கவுள்ளார்

தெலுங்கானா மாநிலத்தின்  இரண்டாவது முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்கவுள்ளார்.

ஆந்திராவை இரண்டாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. . அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்களே இருந்த நிலையில்,சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். இந்நிலையில், தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றசட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தெலுங்கானா ஜன சமிதியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கிடைத்தது. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

Related Posts