தேக்கமலை கோவில்பட்டியில் விமர்சையாக நடைபெற்ற ஆடித் திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தேக்கமலை கோவில்பட்டியில் உள்ள பாளையத்தம்மன் கோவில் ஆடித் திருவிழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்குப்பின் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதைத் தொடர்ந்து பெண்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர். நள்ளிரவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Posts