தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மகராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கிகளில் 2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை விதிகளை மீறி சர்க்கரை ஆலைகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையால் வங்கிக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக சரத்பவார் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அப்போது மத்திய வேளாண் அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மருமகன் அஜித் பவார் உள்ளிட்டோருக்கு விதிமீறலில் தொடர்பு இருப்பதை உறுதி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அமலாகத்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அடுத்த மாதம் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சரத்பவார் மீது வழக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts