தேசிய கட்சிகள் காணாமல் போகும்: தம்பிதுரை ஆவேசம்

 

 

தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் காணாமல் போகும் என்று தெரிவித்துள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, மாநில கட்சிகள் தான் ஆட்சியில் அமர முடியும் என்பதற்கு கர்நாடக தேர்தலே எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானபோது, பாஜக முன்னணி நிலவரத்தை அறிந்து அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். அதில்  கர்நாடக தேர்தல் முடிவுகள் மூலம் தென்னிந்தியாவில் நுழையும் பாஜகவுக்கு வாழ்த்துகள் என்று வரவேற்றார். ஆனால், அதே அதிமுகவைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, தேசிய கட்சிகள் காணாமல் போகும் என்று சூடாக தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகத்தில் அதிக இடங்களை கைப்பற்றியபோதும், பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்று விமர்சித்தார்.

Related Posts