தேசிய மருத்துவ ஆணைய மசோதா – நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அந்த வகையில், மருத்துவ கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வரும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது.

மருத்துவர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, கடந்த திங்கள்கிழமையன்று இந்த மசோதாவை மக்களவை நிறைவேற்றியது.

இதை கண்டித்து,  நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர கால சிகிச்சை பிரிவு மருத்துவர்களை தவிர, பிற பிரிவு மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related Posts