தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி FIT INDIA இயக்கத்தை தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி

தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி FIT INDIA எனப்படும் இந்திய உடற்தகுதி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தயான் சந்த்-இன் பிறந்தநாளான  ஆகஸ்ட் 29-ம் தேதியை தேசிய விளையாட்டு தினமாக அனுசரித்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனைவரும் உடல் பலத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்காமல் மாணவ மாணவியர்கள் இளைஞர்கள் மைதானத்தில் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்பதற்காகவும் இந்திய உடற்தகுதி இயக்கம் உருவாக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்ற பிரதமர் மோடி, இந்திய உடற்தகுதி இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறைகள் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Posts