தேனியில் உபயோகப்படுத்தாத 50 வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் சோதனையிடுகின்றனர் ஆர்.எஸ்.பாரதி 

இது தொடர்பாக தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து மனு அளித்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, தேனியில் உபயோகப்படுத்தாத 50வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கொண்டு வந்து வைத்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும், . பதிவான வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற சதி நடப்பதாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார். .இதுகுறித்து நேற்று அனைத்துக்கட்சியினரும் சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளக்கம் கேட்டதாகவும், மாவட்ட ஆட்சியர் தந்த விளக்கம் தெளிவாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஆகவே தி.மு.க. சார்பில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளதாகவும் அவர் விளக்கம் தருவதாக கூறியுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார். கரூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா சரியாக வேலை செய்யவில்லை எனவும், சுமார் 2 மணி நேரம் வித்தியாசம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேனியில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவை யாரும் கேட்கவில்லை எனவும்,   தேர்தல் நடந்து முடிந்து 20 நாட்களுக்கு பிறகு இப்போது திடீர் என உபயோகப்படுத்தாத வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து வைத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். தர்மபுரி-பூந்தமல்லி, கடலூரில் உள்ள 10 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு கேட்கப்பட்டு இருந்தது எனவும், அதற்கு இதுவரை பதில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் கேட்காத இடத்துக்கு மறுவாக்குப்பதிவுக்காக அதிகாரிகள் தன்னிச்சையாக வாக்குப்பதிவு எந்திரங்களுடன் வருவதில் மிகப்பெரிய மர்மம் உள்ளதாகவும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

Related Posts