தேனியில் உழைக்கும் மகளிர்க்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனியில் உழைக்கும் மகளிர்க்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனிச்செட்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துக்கொண்டு ஒரு கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பிலான மானியத்தை வழங்கினார். இருச்சக்கர வாகன திட்டத்தில் 364 பேருக்கு 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகன மானியத்தை வழங்கினார். இதேபோல், 702 பயனாளிகளுக்கு அவர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனை தொடர்ந்து, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக, பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, சுழல் நிதி மானியத்தையும்  மற்றும் நலத்திட்ட உதவிகளையும், 170 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.

Related Posts