தேனியில் நள்ளிரவு வரை நடைப்பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு

தேனியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல் நள்ளிரவு வரை நீடித்த போதிலும் அதை சற்றும் சளிக்காமல் நடத்திக் கொடுத்த ஆட்சியர் மற்றும் அதிகாரிகளைப் பொது மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள  அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும்  அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மூவாயிரத்துக்கும்  மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நேர்காணல் நடைபெற்றது.இதில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேர்காணல் நடத்தினர். ஒவ்வொருவரிடமும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் விவரங்களை  தனித்தனியாக கேட்டறிந்ததால் அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால், காலை 10 மணிக்கு தொடங்கிய நேர்காணல்  நள்ளிரவு 12 மணிக்கு மேலும்  நீடித்தது. நேர்காணல் முடிய  தாமதமாகும் என்று உணர்ந்து பெண்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியதால் அவர்களின் பெற்றோர்,  கணவர்கள்  ஆட்சியர் அலுவலகத்து வந்து நேர்காணல் முடியும் வரை காத்திருந்து அழைத்துச் சென்றனர். நேர்காணல் நள்ளிரவு மேலாக நீடித்த நிலையிலும் ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும்  அனைத்து அதிகாரிகளும்  எந்தவித சோர்வும் இன்றி அவர்களுக்காக காத்திருந்து நேர்காணலை வெற்றிகரமாக  முடித்துக் கொடுத்தனர். இதனால் நேர் காணலுக்கு வந்தவர்கள் திருப்தி அடைந்ததோடு பொது மக்களும் அதிகாரிகளை  வெகுவாக பாராட்டினர்.

Related Posts