தேனியில் புதிய அரசு சட்டக்கல்லூரியை தொடங்கி வைத்தார் ஓ பன்னீர்செல்வம்

தேனி அருகே புதிய அரசு சட்டக்கல்லூரியை துணை முதல்அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ள நிலையில், சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதை ஏற்று அரசு உத்தரவிட்டதையடுத்து தேனி அருகே உப்பார்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கல்லூரியை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 38 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. படிப்படியாக 160 மாணவர்கள் வரை சேர்க்கப்படுவார்கள் என்றும், புதிய கட்டிடம் கட்டப்பட்ட பின்பு ஆயிரத்து 800 மாணவர்களுடன் கல்லூரி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. விழாவில் தமிழக சட்டத்துறைஅமைச்சர் சிவி. சண்முகம், தேனி எம் பி ரவீந்திரநாத் குமார், சட்டத்துறை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Posts