தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

 

 

தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Related Posts