தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அட்சய பாத்ரா  என்ற தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக . திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆயிரம் சிறார்களுக்கு உணவு வழங்கும் வகையில், இந்த திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்தார்.  இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் பின்னா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அதிமுக கூட்டணி என்பது மதவாத, சாதிய கூட்டணி என மு.க.ஸ்டாலின் விமர்சித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தங்கள் கொள்கைகள் வேறு, பாஜகவின் கொள்கைகள் வேறு என்றார்.  அதிமுக கூட்டணி மக்களை நம்பிய கூட்டணி அல்ல, காசு பணத்தை நம்பிய கூட்டணி என கமல் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கியதை காசு பணம் என குறிப்பிடுகிறாரோ என்று வினவினார்.. தங்கள் பலம் தங்களுக்கு தெரியும் என்றும்,உரிய மரியாதை கொடுக்கும் இடத்திற்கே தேமுதிக செல்லும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,, தேமுதிகவுக்கு அதிமுக உரிய மரியாதை தரவில்லையா எனகேள்வி எழுப்பினார். கூட்டணி கதவு திறந்திருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் பேச வரலாம் என்றும் கூறிய ஜெயக்குமார்,  பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்  கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி,, வராவிட்டால் கவலை இல்லை என்றும்  கூறினார்.

Related Posts