தேர்தலில் அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிக்கம்காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினரின்  அணிவகுப்பு   தூத்துக்குடியில் நடைபெற்றது.  இந்த கொடி அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா தொடங்கி வைத்தார். லயன்ஸ் டவுன்  பகுதியிலிருந்து தொடங்கிய  இந்த  அணிவகுப்பு   ஜார்ஜ் சாலை, சண்முகபுரம், விக்டோரியா உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா ,  மகாராஷ்டிராவில் இருந்து 2 கம்பெனி துணை ராணுவ படையினர் மற்றும்  தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

இதேபோல் திருவண்ணாமலையில்  நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் ந்டைபெற்ற காவல்துறை அணிவகுப்பானது  நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று சார் ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்  நடைபெற்ற கொடி அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

கரூரில் நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நிறைவடைந்தது.

Related Posts