தேர்தலில் திமுக நாற்பதுக்கு நாற்பது இடங்களை வெல்லும் மு.க.ஸ்டாலின் உறுதி

 

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கொங்கு நாடு மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டபோது பொதுமக்களிடம் பெரிய எழுச்சி காண முடிந்த்த்தாக தெரிவித்தார்.

வரும் மக்களவை தேர்தலில் திமுக நாற்பதுக்கு நாற்பது இடங்களை வெல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பிஜேபியின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கயையாக உள்ளதாக் கூறினார். தேநீர் விற்றபவர், ஏழைத் தாயின் மகன் என்று தன்னை கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி ஏழைகளுக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்று குறை கூறினார். ராகுல் காந்தி ஏழைகளின் வறுமையைப் போக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

பிரச்சார கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Related Posts