தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக உதகையில் காவல்துரையினரின்  கொடி அணிவகுப்பு 

 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினரின் கொடி  அணிவகுப்பு  நடைபெற்றது. உதகை சேரிங்கிராசிலிருந்து தொடங்கிய  இந்தக் கொடி அணிவகுப்பு ஊர்வலமானது நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, மாவட்ட்த்தில் 78 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில்  காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Posts