தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

நாகை மக்களவை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மண்ணின் மைந்தனாக, கருணாநிதியை ஈன்றெடுத்த மண்ணிற்கு வந்துள்ளதாகவும், கருணாநிதி மறைந்தபோது அவரை அடக்கம் செய்ய 6 அடி நிலம் தரமறுத்த அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டார்.

டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார்.விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதித்த பகுதிகளை ஒரு வாரம் கழித்து ஹெலிகாப்டரில் சென்று பார்த்ததை மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். பின்னர் குடவாசல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும்  நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

Related Posts