தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரத்தை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறை

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவானது ஏழு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நான்கு கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்தது. மீதமுள்ள மூன்று கட்டங்களுக்கான வாக்குப்பதிவு மே 6, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோடை வெயில் தீவிரமடைந்து வருவதால் வாக்குப் பதிவு நேரங்களை மாற்றும்படி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோடை வெயில் உச்சமடைந்து வருவதால் மதிய நேரத்துக்கு மேல் மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டமாட்டார்கள் எனவும், மே 6 ஆம் தேதி முதல் ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளதால் வாக்குப் பதிவு நேரத்தை காலை 7 மணிக்கு பதிலாக 5 மணிக்கு மாற்றினால் ஏதுவாக இருக்கும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்

Related Posts