தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

வடசென்னை தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தேர்தலுக்காக, ஓட்டுக்காக வந்து மக்களை சந்திப்பவன் தான் கிடையாது, என்றும், தன்னைப் போன்று அதிக நாட்கள் தொகுதிக்கு சென்று மக்களுக்காக அதிக நேரம் செலவழித்த எம்எல்ஏ வேறு யாரும் கிடையாது என ஸ்டாலின் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் முடிவுகள் வந்த பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என அவர் கூறினார்.

தேர்த்லுக்குப் பின்ன்ர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் போல் அல்லாமல் சென்னையில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைய திமுக ஆட்சிக்காலத்தில் கட்டிய பாலம் தான் காரணம் என ஸ்டாலின் குறிப்பிட்டார். கொளத்தூரில் தமது தொகுதி நிதியில் கட்டப்படும் ஏ.சி. வசதியுள்ள சமூக நலக் கூடத்துக்கு காமராஜர் பெயரையே வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். கேபிள் கட்டணம், சமையல் எரிவாயு கட்டணம் குறைக்கப்படும் என அவர் கூறினார்

Related Posts