தேர்தலுக்கு பின் மத்தியில் கூட்டணி ஆட்சி தான் அமையும் எனத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு  அவர் அளித்த பேட்டியில், பிரதமராவது தனது நோக்கம் இல்லை என்று தெரிவித்தார். மக்களவை தேர்தல் முடிவுகள் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருக்கும் என குறிப்பிட்ட அவர்,  தேர்தலுக்கு பின், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் அடுத்து அமையும் ஆட்சியை முடிவு செய்யும் சூழ்நிலை உருவாகும் என்று தெரிவித்தார். மத்தியில் அடுத்து கூட்டணி ஆட்சி தான் அமையும் எனவும் 2014 தனித்து ஆட்சி அமைத்தது போல், மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

கடந்த தேர்தலில், அக்கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் அக்கட்சி தோல்வியை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்த அவர்,  தேசிய அளவில், ஒத்த எண்ணங்கள் கொண்ட கட்சிகளுடன் இணைந்து புதிய அணி அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Posts