தேர்தலை சந்திக்க அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் பழனிச்சாமி

தேர்தலை சந்திக்க அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 இடங்களில் அமைக்கப்பட்ட பசுமைவெளி பூங்காக்களை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து, நேரு கலையரங்கில் மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது, ஒரு நாட்டின் உயர்வும், வளர்ச்சியும் கல்வியை சார்ந்துள்ளது எனவும், மாநிலத்தில் சிறந்த கல்வி இருந்தால் அமைதி நிலவும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு அரசு வழங்குவதாகவும், அரசு பள்ளிகளில் படித்தால் உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலையை அரசு உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்,  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நீர்மட்டத்தை உயர்த்தகூடாது என்பதற்காக கேரளா தவறான தகவலை பரப்புவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து முழுமையான கருத்துரு எட்டப்படவில்லை என கூறிய அவர், எப்போது தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Related Posts