தேர்தலை நடத்த அதிமுக கட்சி அஞ்சுவதில்லை

தேர்தலை நடத்த அதிமுக கட்சி அஞ்சுவதில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

      சென்னை சேத்துப்பட்டில் உள்ள கூட்டுறவுத்துறை பதிவாளர் அலுவலகத்தில் மண்டல கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைப்பெற்றது. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு துறை சார்பில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கூட்டத்தில், சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் 4 கட்டமாக நடத்தப்படும் எனவும், தேர்தல் நடத்த அஞ்சும் கட்சி அதிமுக இல்லை எனவும் கூறினார்.

Related Posts