தேர்தல் ஆணையத்திடம் பதில் அளிக்க வேண்டுமென தகவல் வெளியாகியுள்ளது உண்மைக்கு புறம்பானது

புதுச்சேரியில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி வகிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பதில் அளிக்க வேண்டுமென தகவல் வெளியாகியுள்ளது உண்மைக்கு புறம்பானது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

      புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம் சக்தி சேகர், ஆதாயம் தரும் வாரிய தலைவர் பதவி வகிப்பதாக காங்கிரஸ் கட்சியின் 8 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து கடிதம் வந்திருப்பதாக கூறியுள்ளது உண்மைக்கு புறம்பானது எனவும்  யாருக்கும் கடிதம் வரவில்லை எனவும் உறுதிபட தெரிவித்தார். மேலும் புதுச்சேரி மக்களை திசை திருப்பவே, ஓம் சக்தி சேகர், தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி மலிவு விளம்பரம் தேட நினைப்பதாக அவர் குற்றம் சாட்டினார். வாரிய தலைவர் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்த நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி  சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேரின் பதவி பறிக்கப்படும் எனஎதிர்கட்சிகள்  யாரும் பகல் கனவு கான வேண்டாமென கூறினார். மற்ற மாநிலங்களை விட புதுச்சேரியில் தான் பெட்ரோல், டீசல் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறிய முதலமைச்சர் நாராயணசாமி, இதை விட பெட்ரோல் டீசல் விலைகுறைக்க இயலாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related Posts