தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது : வைகோ

Want create site? Find Free WordPress Themes and plugins.

பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தலை ஒத்தி வைத்த தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற அரசமைப்பு சட்ட மாநாட்டில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பருவ மழையை காரணம் காட்டி தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வைகோ, இதற்கு முன்பு கடும் மழை மற்றும் குளிர் காலத்தில் தேர்தல்கள் நடைபெற்று இருப்பதை சுட்டிக்காட்டினார். பருவமழையை காரணம் காட்டி, தமிழகத்தில் இடைத்தேர்தலை ஒத்தி வைத்த  தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

தமிழக வரலாற்றில் ஆளுநர் ஒருவர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய்  ஊழல் நடந்துள்ளதாக  கூறியிருப்பது இதுவே முதல்முறை எனவும், அவருக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவருடைய பொறுப்பு எனவும் கூறிய வைகோ, இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் பதவியை விட்டு விலகவேண்டும் அல்லது விலக்கபட வேண்டும் என்றார்.

 

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts