தேர்தல் நாளில் அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்:சத்ய பிரதா சாஹு

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்த  அவர்,  தமிழகத்தில் உள்ள, 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறும் நாளான  18 ஆம் தேதி அன்று  தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது எனவும், அனைத்து நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். , எனவே, மென்பொருள் நிறுவனங்கள் உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிப்பது கட்டாயம் எனவும் சத்ய பிரதா சாகு  கூறினார்.

Related Posts