தேர்தல் நேரத்தில் விடுபட்ட அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும்  எடப்பாடி பழனிச்சாமி

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டிக்கு ஆதரவாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை ஐராவதநல்லூரில் பொது மக்களிடையே வாக்கு சேகரித்தார். பின்னர் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் விடுபட்ட அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

 

தேர்தல் முடிந்த பிறகு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை எளிய குடும்பங்களுக்கும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என கூறிய அவர், மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி சைக்கிள் உட்பட அனைத்து சலுகைகளும் தடையின்றி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Posts