தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி 6-வது முறையாக தமிழகம் வருகை

 

நாளை தமிழகம் வர உள்ள பிரதமர் மோடி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 2 இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதற்காக இன்று இரவு 8.35 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்குகிறார்.

அங்கிருந்து நாளை காலை 11 மணிக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

அங்கிருந்து பிற்பகல் 12 மணி அளவில் ஆண்டிப்பட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் செல்லும் மோடி, அங்கு ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

இதனையொட்டி, ஆண்டிப்பட்டி, ராமநாதபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts