தேர்தல் முடியும் வரை பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடை

Want create site? Find Free WordPress Themes and plugins.

விவேக் ஒபராய் நடிப்பில் `பிரதமர் நரேந்திர மோடி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் சுயசரிதை படம்  நாளை வெளியிடப்பட இருந்தது. இதற்கு தடை  விதிக்கககோரி மத்திய பிரதேசம்,  மும்பை உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்களவைக்கு முதல் கட்ட தேர்தல் நடக்கும் நிலையில் படத்தை வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று குற்றம்சாட்டிய  காங்கிரஸ் தரப்பில்   படத்தை வெளியிட தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை நேற்று விசாரித்த நீதிபதிகள், ‘படத்துக்கு தணிக்கை குழு  இன்னும் சான்றிதழ் அளிக்காத நிலையில், 2  நிமிடங்கள் ஓடக்கூடிய படத்தின் டிரெய்லரை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது என்றும் எனவே,  படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது’ என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் படம் வெளியாவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இதனிடையே பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்  யூ சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில் தேர்தல் முடியும் வரை நரேந்திர மோடி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட பி.எம். நரேந்திர மோடி என்ற திரைப்படத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் படத்தை பார்த்து ஆராய தேர்தல் ஆணையம் தரப்பில் குழு அமைக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.   குழுவின் ஒப்புதல் கிடைத்த பிறகு படம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அரசியல் தலைவரை தொடர்பு படுத்தும் தனிநபரின் நோக்கம் எதுவும் மின்னணு ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts