தேர்தல் விதியை மீறியதாக அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கடந்த 9-ந்தேதி அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்துக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் ஆனந்த் அதிகப்படியான வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டி.டி.வி.தினகரன் மற்றும் வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் மீது பறக்கும் படை அதிகாரி ரமேஷ்குமார் முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் வழக்கு பதிவு செய்துள்ளார்.

Related Posts