தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று உற்சாகத்துடன் உள்ள சென்னையின் வெற்றிநடைக்கு தடை போடுமா மும்பை?

Want create site? Find Free WordPress Themes and plugins.


இரு அணிகள் இடையிலான ஐபிஎல் ஆட்டம் மும்பையில் இன்று இரவு நடைபெறவுள்ளது.நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தொடர்ந்து 3 வெற்றிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் துவண்டுள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் மும்பை 14, சென்னை 12முறை வென்றுள்ளன.

எனினும் சென்னை அணி தற்போது கேப்டன் தோனியின் அபார ஆட்டத்தால் கூடுதல் பலம் பெற்றுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்ட அணியை தோனி அபாரமாக ஆடி 75 குவித்து வெற்றி பெறச் செய்தார். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சென்னை அணி  ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  செனனை அணியில் வேகப்பந்து வீச்சை காட்டிலும் சுழற்பந்து வீச்சு வலுவாக உள்ளது. ஆனால் மும்பை மைதானம் வேகம், பவுன்சர்களுக்கு உதவியாக இருக்கும். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக்-ஐ பேட்டிங்கில் அதிகம் சார்ந்துள்ளது. மற்ற வீரர்கள் சோபிக்கவிலலை. மேலும் வலுவான வேகப்பந்து வீச்சை கொண்டுள்ள மும்பை அணி.சொந்த மைதானத்தில்  வெற்றி பெறுமா அல்லது சென்னை ஆதிக்கம் செலுத்துமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts