தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேரை கைது

வாணியம்பாடியில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த  4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து நான்கு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வந்தனர்.  இந்நிலையில், நியூ டவுன்  பகுதியில்  வாணியம்பாடி  — கிருஷ்ணகிரி  செல்லும்  சாலையில் போலீசார்  வாகன  தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக  இருசக்கர  வாகனத்தில்  வந்த  இருவரை  மடக்கி  விசாரிக்கும்போது, அவர்கள் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் இரண்டு பேரை கைது போலீஸார் செய்தனர். அவர்களிடமிருந்து, 10 சவரன் தங்க நகைகள் , மூன்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் 2 எல்.இ.டி. டிவி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Related Posts