தொடர் போராட்டத்தால் தேர்வு கட்டணம் குறைவு

மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக, இளங்கலை, முதுகலை படிப்பிற்கான தேர்வு கட்டணத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைத்துள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் பல்லைக்கலைக் கழகத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம்  திடீரென்று உயர்த்தப்பட்டது. இளங்கலை பட்டப்படிப்புக்கான ஒரு பாடத்திற்கு 68 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், முதுகலை பட்டப்படிப்பில் ஒரு பாடத்திற்கு 113 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதற்கு  அரசுக்கல்லூரி மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு கட்டணங்கள் குறைக்கப்படுவதாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் பெருவழுதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசின் ஒப்புதலுடன் தேர்வு கட்டணங்கள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Related Posts