தொண்டர்கள் சோர்வடையாமல் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் ஓ.பி,எஸ், எ.பி.எஸ் கடிதம்

 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அக்கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

அதில், ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுகவுக்கு இந்த தேர்தல் தாயில்லாப் பிள்ளைக்கு நடக்கும் தலைப்பிரசவம் போல என்று தெரிவித்துள்ளனர். மேலும், அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை உணர்ந்துக்கொண்ட எதிர்கட்சிகள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்களை திசைத்திருப்பவும், தொண்டர்களை சோர்வடைய வைக்கவும் முயற்சி செய்கின்றனர் எனவும் கூறியிருக்கின்றனர்.

மக்கள் அனைவரும் இலைக்கும், பூவுக்கும், கனிக்குமே எங்கள் ஓட்டு என்று முரசடித்துச் சொல்கிறார்கள் என்றும், சொல்லிக்கொள்ள சாதனைகள் இல்லாத திமுகவும், காங்கிரசும் அதிமுக மீது தரம் தாழ்ந்து விமர்சனங்களைக் கூறி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிமுக வலைதளத்தில் மட்டும் வாழும் கட்சி இல்லை என்றும் இது ஆலவிருட்ச இயக்கம் என்றும் அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்

Related Posts